×

தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் 2012ல் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய சிறப்பு பாடங்களில் மாணவர்களுக்கு கற்றுத்தர ஆசிரியர்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு 2014ல் 2 ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு, 2017ல் 700 ரூபாய் சம்பள உயர்வு, 2021ல் ரூ. 2,300 சம்பள உயர்வு வழங்கப்பட்டு இப்போது மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இது போதுமானதல்ல. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இன்னும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை, சம்பள உயர்வும் அறிவிக்கவில்லை. பொங்கல் பண்டிகை வர இருப்பதால் பகுதிநேர ஆசிரியர்கள், தங்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் வழங்க கோரிக்கை வைக்கின்றனர். எனவே அவர்களது கோரிக்கைகளான பணிநிரந்தரம், சம்பள உயர்வு, பொங்கல் போனஸ், பண்டிகை முன்பணம் ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும்.

Tags : Tamil Nadu ,TAMAGA ,President ,G.K. Vasan Emphasis , Part-time teachers working in Tamil Nadu government schools should be made permanent: TAMAGA President G.K. Vasan Emphasis
× RELATED பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்...